Tuesday, 13 November 2012

ஆளுடைய அரசுகள் அருள்மாலை

திருத்தகுசீர் அதிகைஅருள் தலத்தின் ஓங்கும்
சிவக்கொழுந்தின் அருட்பெருமைத் திறத்தால் வாய்மை
உருத்தகுமெய் உணர்ச்சிவடி வாகிச் சைவ
ஒளிவிளங்க நாவரசென் றொருபேர் பெற்றுப்
பொருத்தமுற உழவாரப் படைகைக் கொண்ட
புண்ணியனே
நண்ணியசீர்ப் புனித னேஎன்
கருத்தமர்ந்த கலைமதியே கருணை ஞானக்
கடலேநின் கழல்கருதக் கருது வாயே



மேன்மையுடைய சிறந்த திருவதிகை என்ற அருள் நிறைந்த திருப்பதியில்
விளங்கும் சிவபரம்பொருளின் திருவருட் பெருமையால் சத்தியத்தின் மெய்
உணர்வின் வடிமான சைவ நெறியில் ஒளி விளங்க திருநாவுக்கரசர் எனும் பெயர் தாங்கி மேற்கொண்ட நெறிக்கு தக்கப்படி உழவார படைகையில் ஏந்திய
புண்ணியனே! சிறந்த புண்ணியனே புனிதமானவனே தூயவனே என் கருத்தமர்ந்த கலை, ஒளிக் கலை யுடைய சந்திரனே,கருணை மிகுந்த ஞானகடலே உன் திருவடியை
எந்நாளும் நினைந்து துதித்திட உன்னருள் தருவாயே!
 


No comments:

Post a Comment