உலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும்
உற்றிலாச் சிறிய ஓர் பருவத்
திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில்
ஏற்றவுந் தரமிலா மையினான்
விலகுறுங் காலத் தடிக்கடி ஏற
விடுத்துப்பின் விலகுற தளித்தாய்
திலகநற் காழி ஞான சம்பந்தத்
தெள்ளமு தாஞ்சிவ குருவே
சீர்காழி பத்தியில் அவதரித்த திருஞானசம்பந்தர் என்னும் தெளிந்த
ஞான பிரானே சிவ குருபரனே! உலகியல் அறிவு சிறிதும் பெறாத சிறு
பருவத்தில் இருந்த எனக்கு அகநிலை நின்று திருவருள் நெறிப்படவும்!
போதுமான தகுதி இன்மையால் அதினின்று தடுமாறி விழும்போது தடுத்து
காத்து செந்நெறி நிறுத்தி பின் அதினின்று மெய்நிலை மேல்நிலை பெற
அருளியும் செய்தாயே! உன் பேரருள் பெருங்கருணையே!
உயிர்அனு பவம் உற்றிடில் அதவிடத்தே ஓங்கருள் அனுபவம் உறும்அச்
செயிரில்நல் அனுபவத்திலே சுத்த சிவ அனுபவம் உறும் என்றாய்
உயிர் அனுபவம் - நம் கண்மணி ஒளியில் சும்மா இருந்து தவம் செய்தால் உயிர் அனுபவம் கிட்டும்! தொடர்ந்து தவம் செய்தால் அருள்பெறலாம்! இன்னும் தவம் தொடர்ந்தால் உயிருக்கு உயிரான சிவ அனுபவ ஒளி கிட்டும் !!

https://www.youtube.com/playlist?list=PLbb60V1ZcvrcTBIofmd4VPjmKZSVFgIr-
ReplyDelete