நாதக்கதி கடந்த பெருங்கருணை கடைக்கண் மலர்ந்தருளி
இது முக்கியமான ஒரு ஞான ரகசியம்! இறைவன் அருள்
எப்போது கிடைக்கும்? ஆத்ம தரிசனம் எப்பொழுது கிடைக்கும்? என்ற கேள்விக்கு இதுவே விடை! நாம் ஞான சற்குரு விடம் இருந்து திருவடி தீட்சை பெற்று சும்மா இருந்து தவம் செய்து வருகையில் பலபல அனுபவங்களுக்கு பிறகு நாதத்தொனி கேட்கும். தசவித நாதம் கேட்கும்.அந்த நாதம் உள்ளே எங்கோ போய் முடிகிறதோ?! அதுவே அதன் ஆரம்ப இடம்! அந்த இடமே முச்சுடரான லாலடஸ்தானம்!ஆத்ம ஸ்தானம் ! வெளியே இருகண்கள் உள்ளே சேரும் கடைசி - கடைக்கண்! அதுவே! வலது கண்ணும் இடதுகண்ணும் உள்ளே போய் ஒன்று சேரும் இடமே கடைக்கண்! அம்மா தாயே உன் கடை கண்ணால் பார்க்க மாட்டயா? என எல்லா ஞானிகளும் பாடியது! இந்நிலையில் தான் ! இதில் இன்னொரு ரகசியமும் உள்ளது! அம்மா என்று அழைக்கிறார்கள் ஞானிகள் !காரணம்? "நாத முடிவில் நல்லாள் இருப்பிடம்" நாதம் முடியுமிடம் கடைக்கண்! மூன்றாவது கண் உள்சுடர்! இந்த இடம் தான் வாழை தாய் இருக்குமிடம்! வாலையை பணிந்து அருள் பெற்று அமுது உண்ட பின்னரே அப்பனை காண போக வேண்டும்! அம்மை தான் வாலை தான் வழிகாட்ட வேண்டும் ! அந்த வாலை கோயில் கொண்ட இடம்தான் கன்னியாகுமாரி! வாருங்கள் கன்னியாகுமரிக்கு வாலை அருள் பெறவே! பக்தி வேண்டும் பண்பு வேண்டும். பணிவு இருக்கணும் அன்பு இருக்கனும் அப்போது தான் வாலை தாய் மகிழ்ந்து அமுதம் தருவாள்! வறட்டு வேதாந்தம் பேசாதீர்! புறத்தே பக்தி, அகத்தே மானச பூசை! இருந்தாலே ஞானம் கிட்டும்! அருள் பெறலாம்!
No comments:
Post a Comment