Wednesday, 21 November 2012

வெங்காயம் சுக்கானால்

வெங்காயம் - வெம் - காயம், சுக்கானால்,வெந்தயதால் வெந்த - இதயத்தால், ஆவதென்ன, இங்கார் சுமப்பார் இச்சரக்கை - இங்கு யாரு சுமப்பார் இந்த உடலை, ஏரகத்து செட்டியாரே - திருவேகரத்தில் குடியிருக்கும் ஆண்டவனே, மங்காத சீரகம் - ஒளி பொருந்திய சீர்-அகம். தந்தீரல், வேண்டேன், பெருங்காயம்-பெரும்-காயம், தந்காயம்-தம்-காயம் தங்கம் என ஆக்குவதற்கு..

இப்பாடலின் பொருள் திருவேகரத்தில் அமர்ந்திருக்கும் இறைவனே என் உடலை தங்கமென மாற்றுவதற்கு எனக்கு ஒளி பொருந்திய உன் சீர் ஆகிய கண்ணை தா என்கிறார். அப்போது என் வெம்மையான காயம் சுக்குபோல் வற்றும் வெந்த இதயத்தால் எனக்கு கேடு ஒன்றும் இல்லை. எனக்கு பெரிய பருத்த உடல் வேண்டாம் என கூறுவதாக உள்ள மிக அருமையான பாடல்.

எனவே ஆன்மாக்களே, உடலை பெருகாதீர்கள், மனதை விரிவடையச் செய்யுங்கள்.

உங்கள் பணியால் மாக்கள் மக்களாக உயர வேண்டும். மக்களோடு ஐக்கியமாகி மக்கள் தொண்டே மகேசன் தொண்டென பணிபுரியுங்கள் இறைவன் அருள்வான். எதையும் மறைக்காதீர்கள். நீங்கள் மக்கள் மனதை விட்டு மறைந்து போய்விடுவீர்கள். நல்வழிபடுங்கள் நல்வழிபடுத்துங்கள். இங்கு நாம் தெரிந்து கொண்டதை எல்லோரும் அறியட்டுமே என எண்ணியதால் தான் இக்கருத்தை எல்லாம் வல்ல இறை அருளாலும் குரு அருளாலும் முன்வைக்கிறேன், வைத்துக்கொண்டு இருப்பேன்.

அன்னதானத்திற்கு அடுத்த மேலான அரிதான தானம் ஞான தானம் ஆன்ம தாகங் கொண்டோருக்கெல்லாம் வாரி வாரி வழங்க வேண்டும்! ஒரு ஜீவன் கடைத்தேற வழிகாட்டுதல்லவா? எவ்வளவு புண்ணியம்! இதைவிட பெருன்செயயல் வேறென்ன இருக்க முடியும்? ஆனால் ஆன்ம தாகம் கொண்டவர்கள் உலகில் மிகவும் குறைவு. அதை தானம் செய்பவர்களோ மிக மிகக் குறைவு - விற்பவர்கள் தான் நிறைய இருக்கிறார்கள். பலர் தவறான வழிகாடிகலகவே இருக்கிறார்கள் என்ன செய்வது? இறைவன் தான் அருள்புரிய வேண்டும்.

இன்றைக்கும் மகான்கள் நம்மிடையே இருகிறார்கள். உலகத்திற்காக பற்பல சேவைகளில் தன பக்தர்களை ஈடுபடுத்துகிறார்கள். அவர்களையும் பக்குவபடுதுகிறார்கள் ஆனால் ஞான சாதனையை ரகசியமாகவே காக்கிறார்கள். அது ஏன் ? பக்குவபடுத்தி கொடுக்கலாம் என்றால் எத்தனை பேர் பக்குவம் பெறுவார்? நீச்சல் படிக்க வேண்டுமென்றால் தண்ணீரில் இறங்கியே தீர வேண்டும். ஒரு சில முறை மூழ்கி தண்ணீரும் குடித்து விடுவது இயற்கைதானே. கரையிலிருந்து கொண்டு நீச்சலைப் பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள் போதுமா? அனைவரையும் தண்ணீரில் இறக்கி விடுங்கள். எல்லோரும் நீச்சல் படிக்கட்டும். சிலர் சிறிது சிரமப்படாமல் கைதூக்கி விடுங்கள் உங்கள் அருளால்! எனவே அடியேன் மகான்களை பணிவுடன் வணங்கி கேட்டுக் கொள்வதெல்லாம் நீங்கள் அறிந்ததை எதுவும் மறைக்காமல் எல்லோருக்கும் சொல்லி எல்லோரையும் மேன்மையடையச் செய்யுங்கள் என்பதே.

- ஞான சற்குரு சிவ செல்வராஜ்.

Wednesday, 14 November 2012

சிற்சபை விளக்கம்

சோறுவேண்டினும் துகில் அணி முதலாம்
சுகங்கள் வேண்டினும் சுகமலால் சுகமாம்
வேறு வேண்டினும் நினை அடைந் தன்றி
..
உண்ண உணவு உடுக்க உடை இருந்து சுகமாக வாழ வேண்டிய வீடும் கிட்டினால் போதுமா? இதுவல்ல பூரண வாழ்க்கை! சுகமான வாழ்க்கை! வேறு எது கிடைத்தாலும் பிரயோஜனமில்லை! எல்லா ஞானிகளும் கூறியது என்ன தெரியுமா? இறைவைனை அடைவதொன்றே பேரின்பம் தரும்! மற்றெல்லாம் சிற்றின்பமே!இதுவே சத்தியவான் வார்த்தை! அடியேன் உணர்ந்தேன்! உன் திரு சந்நிதியின் முன் நிற்கின்றேன்! இறைவா உன் மனக்குறிப்பு அறியேன் !உன் சித்தம் எதுவோ? வடலூரில் சத்திய ஞான சபையில் கொலுவிருக்கும் தருமதுரையே! பழத்தின் சாறு போல் அன்பால் கனிந்து கருணையே உருவான மெய்யன்பர்களுக்கு அருள் புரியவே காத்து இருக்கும் தனிப்பெரும் பதியே அருட்பெருன்ஜோதியே!

நால்வரை பற்றி வள்ளலார் !!!


அன்புருவம் பெற்றதன் பின் அருளுருவம் அடைந்து
பின்னர் இன்புருவம் ஆயினை!
மணிவாசக பெருந்தகையே  உன் பெருமை
யாராலும் கூற முடியாதே!



திருவருட் பிரகாச வள்ளலார் கண் என் போற்றி துதித்தது நால்வரை! சம்பந்தர்!
நாவுக்கரசர்! சுந்தரர் ! மணிவாசகர்! மூவர் தேவாரமும், மணிவாசகர் திருவாசகமும் வள்ளலாரின் உயிர் மூச்சு!

ஆளுடைய பிள்ளை ஆளுடைய அரசு ஆளுடை நம்பி ஆளுடை அடிகள் என நால்வரை போற்றுகிறார்! இறைவனின் பரிபூரண அருளை பெற்று நால்வரும் நால்வகை மார்க்கத்திற்கு மிக சிறந்த உதாரணமாக விளங்கினர்! சதா காலமும் தேவார திருவாசகங்களை கேட்டு மகிழ்வார் ஆனந்தம் கொள்வார் வள்ளல் பெருமான்! ஆளுடைய ஆளுடைய என நால்வரும் அடை மொழி கொடுத்து உள்ளார்கள் வள்ளல் பெருமான் ! நால்வரும் சத்புத்ர மார்க்கம் தாச மார்க்கம் சகமார்க்கம் சன்மார்க்கம் என நால் நெறிக்கு உதாரணமாக திகழ்ந்தார்கள்! பரம்பொருளின் பரிபூரண ஆளுமையால் வாழ்ந்தார்கள்! நால்வரும் தண்ணி உணர்ந்து ஆளுமை திறத்துடன் திகழ்ந்தார்கள்! எனவே வள்ளல் பெருமான் கூறியதில் தவறோன்றுமில்லை.

 இந்த நான்கிலும் உள்ள இன்னும் சில விசயங்களை பார்ப்போம்!

-----திருஞானசம்பந்தர்-----

திருஞானசம்பந்தர் பெருமான் மூன்று வயதில் சிவைதரு ஞானப்பால் உண்டு
அக்கணமே கண்ணன் பெற்றார்!  "தோடுடைய செவியன்" என தேவாரம் பாட
ஆரம்பித்தார். சீர்காழி பதியினிலே சித்தத்திலே அமர்ந்த நற்காழி ஞான சம்பந்த
செல்வமே எனது சற்குருவே என போற்றுகிறார் வள்ளலார்!

"பரநாத மாந் தலத்தே ஒத்த தன்மயமாம் நின்னை
நீ இன்றி உற்றிடல் உயிரனுபவம்"
"பரம் பரத்துட் புறமாகி இனிப்புற ஒன்றும் இயம்புறா
இயல்பாய் இருந்தே அருளனுபவம்"

என்று எனக்கு அருள் புரிந்த ஞான சம்பந்த சற்குருவே!

வள்ளல் பெருமானுக்கு, உயிரனுபவமும், அருளனுபவமும் கூறியருளிய
சம்பந்த பெருமான் கடைக்கணித்து - கடைக்கண் காணித்து உனக்குள் தான்
அடிமுடி உள்ளது என்று அருளியிருக்கிறார்!
இருகண்ணும் உள் சேரும் இடமே, கூடும் இடமே கடைக்கண்!

"என்பு பெண்ணுருவோடின்னுயிரது கொண்டெழுந்துந்திட புரிந்த" எலும்பைக்கொண்டு ,இறந்த பெண்ணை உயிர் கொடுத்து மீண்டும் உருப்பெறச் செய்தார்! திரு ஞான சம்பந்தர்!

"பெருமண நல்லூர்த் திருமணங்காண  பெற்றவர் தமையெலாம் ஞான உருவடைந்தோங்க கருணை செய்தளித்த " திருஞானசம்பந்தர் 16வது வயதில் திருமணம் புரிந்த போது , அவர் திருமணதிற்கு வந்த அனைவரையும் ஞான உருவடைந்து ஓங்க - ஒளியில் ஐக்கியமாகிட கருணை செய்தார்!
"கூண்டோடு கைலாசம்"! யார் புரிவார் இத்தகைய கருணை மழை!

"பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே"

தவத்தால் கண் சிவந்து பவளம் போலாகும்! அப்போது அக்கண்மணியில் முளைக்கும் ஓங்கும் ஒளி ! அதுவே கற்பக விருட்சம். கரும்புவே! கனியே! என் இருகண்ணே! கண்மணியே!

---- திருநாவுக்கரசர்  ----

திருநாவுக்கரசர்  ஆளுமை பெற்ற அரசு! இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட
திருநாவுக்கு அரசு! சைவத்து  அணிகலனாக திகழ்ந்தார் அப்பர் சுவாமிகள்!
(அப்பர் நாவுக்கரசரின் இன்னொரு பெயர்). "எம்பாவமெல்லாம் அகற்றி அருட்பான்மை நல்கும் பண்புடைய பெருமானே" என வள்ளல் பெருமான் சொல்லரசரை போற்றி மகிழ்கிறார்! "கதிர்தரு கற்பகமே முக்கனியே ஞான்க்கடலே என்கருத்தே என் கண்ணுளானே" என்கிறார்!

"காளத்தியான் அவன் என் கண்ணிலுள்ளான் காண் " என அப்பர் சுவாமிகள் பாடியதை கொண்டு  அப்பர் சுவாமிகளே! இறைவனே! என் கண்ணுளானே அவனே கதிர்தரும் கற்பகம் முக்கனி ஞானக்கடல் என்றும் என் கருத்தாக சித்தத்தில் இருப்பவன் என்கிறார் வள்ளல் பெருமான்!

"ஒண்ணுள்ளே ஒன்பது வாய் வைத்தாய்" என்கிறார் அப்பரை பின்பற்றி வள்ளலாரும்! நமது உடலில் ஒன்பது வாசல் இருப்பதை அறிவோம்! பத்தாவது வாசல் பெண்களுக்கு கருவாய்! அது சிற்றின்பம் நுகர படைத்தான் கடவுள் ! பத்தாவது வாசல் மனித குலத்துக்கு ஞானத்துக்கு 'ய' - இருகண் உள்சேரும் அக்னிகலை இடம்! அந்த வாசலில் '8'ம்  '2'ம்  'அ'வும் 'உ' வும் சேர
'ய' வாகும் 10 ஆகும்! இந்த வாசல் திறக்கவே ஞானம் செய்வதே ஞான சாதனை! பத்தை பற்றுங்கள் உங்கள் பற்றாகிய கர்மம் தொலையும் ! அதற்கு முதலில் திருவடியை பற்றுக! "கற்றுணையாற் கடல் கடந்து கரையில் போந்து " நாவரசரை கல்லில் கட்டி கடலில் போட்டான் கயவன்! பஞ்சாட்சரம் ஓதி
பார் புகழ கல்லே தெப்பமாக மிதந்து கரைவந்து சேர்ந்தார் எம்சைவமணி திருநாவுக்கரசு! திலகவதி அம்மையாரின் தம்பியே! இறையாம் சிவமருள் பெற்றதில் அண்ணனே! தெய்வத்தின் அடியார் திருநாவுக்கரசர்! அந்த அடியாருக்கு அடியாராக விளங்கியவர் அப்பூதி அடிகள்! தம் மெய்யடியார்க்கு
மெய்ஞ்ஞானம் அருளிய வள்ளல் திருநாவுக்கரசர்! பாம்பு கடித்து மாண்ட அப்பூதியடிகள் பிள்ளையை உயிர்பெற செய்து அருளினார்!


--------சுந்தரமூர்த்தி சுவாமிகள் ------


 இறைவனால்  முற்றிலும்  ஆட்கொள்ளப்பட்டு  வன்தொண்டர்  என  போற்றப்பட்டவர்  நமது  சுந்தரமூர்த்தி  சுவாமிகள் ! தன்னையே  ஆளும்  திறன்  பெற்ற  ஒப்பற்ற ஞானவான்  சுந்தரர்! வள்ளல்  பெருமான் ஆளுடைய  நம்பிகள்  என்றார்  பக்தியோடு ! மணிமுத்தாற்றில்  இறைவர்  தந்த  பொன்னை  கொட்டி  பின்  திருவாரூர்  குளத்தில்  அந்த  பொன்னையெல்லாம்  எடுத்த அற்புத  சித்தரே ! சுந்தரமூர்த்தி  சுவாமிகளே ! அவிநாசியிலே  ஏரியில்  முதலையால்  விழுங்கப்பட்ட  சிறுவனை பல வருடங்கழித்து  அந்த  ஏரியில்  நீர்  வரவழைத்து  முதலையை  வரவைத்து  அதன்  வாயிலிருந்து  சிறுவனை  மீட்ட  அருள்  அற்புதத்திற்கு  நிகரேது ! திருநாவலூர்  பெருந்தகையே  தேவரும் இந்திரனும்  திருமாலும்  நான்முகனும்  மற்றுள்ள  முனிவர்  யாவரும்  வியந்து பார்க்க சுந்தரமூர்த்தி  பெருமானே  நீவிர்  வெள்ளை  யானையில்  ஏறி  சேரமான்  பெருமாள்  நாயனார்  குதிரையில்  தொடர  திருக்கைலாயம்  சென்றதை  நான்  காணவில்லையே  என வள்ளலார்  வியந்து  போற்றி  மகிழ்கிறார் ! உவகை  கொள்கிறார் !

          சுந்தர  மூர்த்தியான மெய்யடியார்க்கு  அடியாராய்  அந்த  இறைவனே  திருவாரூர்  வீதியிலே  தூது  சென்றான்  என்றால் , சுண்டரமூர்தியே உன்  பெருமைக்கு நிகரேது  நான்முகனும் திருமாலும் பெறாத பெரும் பேறல்லவா இது! வடலூரார் நாவலூரரை  எண்ணி  எண்ணி  உருகி  பாடிப்  பரவயுள்ளார் !

இறைவனால்  ஆளுமை  பெற்ற  பிள்ளை  திருஞான  சம்மந்தப்பெருமான் !
இறைவனால் ஆளுமை பெற்ற அரசு திருநாவுக்கரசப் பெருமான்!
இறைவனால் ஆளுமை பெற்ற நம்பி சுந்தர மூர்த்தி பெருமான்!
இறைவனால் ஆளுமை பெற்ற அடிகள் மாணிக்கவாச பெருமான்!



 நால்வரும் நன்னெறியில் நால்நெரியில் உயர்ந்தோர்! திருநாவுக்கரசர் தாச மார்க்கத்திற்கு ஒரு நல்ல உதாரணமாக தொண்டு செய்து வாழ்ந்தார்!
திருஞானசம்பந்தர் சற்புத்திர மார்க்கத்துக்கு ஒரு நல்ல உதாரணமாக சிவையால் பாலூட்டி வளர்க்கப்பட்டார்.பிள்ளை கைநோகுமோ என பொற்றாளம் ஒலிக்க அருளினாள்! சுந்தர மூர்த்திகள் சக மார்க்கத்துக்கு ஒரு நல்ல உதாரணமாக திகழ்ந்தார்! சிவனே இவனுக்காக தூது சென்றாராம்! சிறந்த தோழர் சிவனுக்கு! மாணிக்கவாசகரோ சன்மார்க்கத்துக்கு ஒரு நல்ல உதாரணமாக திகழ்ந்தார்! நானே நீ நீயே நான் என உணர்ந்தார்! உரைத்தார்! உறைந்தார் ஒளியிலே! இந்நால்வரும் வடலூரரை கவர்ந்த ஞானவான்கள்!
திருவருட் பிரகாச வள்ளலார் எப்போதும் திருவாசக பெருமை பற்றியே பேசிக்கொண்டு இருப்பார் எனச்  சொல்வர்!










 இறைவன் ஆளுமை பெற்று ஒப்பற்று விளங்கும் ஞானமணி வாசகமாம்  திருவாசகம் உரைத்த மணிவாசக பெருமான் பெருமை கூறமுடியுமோ ? "கருவெளிக்குப் பெருவெளிக்குப் பித்தாகி திரிகின்றோர் குருவேளிக்கே நின்று " நம் கரு என்பது உயிர்தங்கிய இடம் நம் கண்கள் உள்ளே! அங்கே இருக்குது வெட்டவெளி ? பெருவெளி அங்கேலயித்து அதிலே பித்தாகி திரிகின்றோர் குருவெளி -சிவம் தங்கிய பெருவெளியிலே நின்று நிலைப்பார்! சித்தம் போக்கு சிவம் போக்கு என்று அலைவர் . "மன் புருவ நடு முதலா மனம் புதைத்து" மனிதனின் புருவ நடு என்பது கண்மணி மத்தியில் உள்ள வாசல் மணிவாசல்
அதிலே மனம் புதைத்து தவம் செய்பவரே மணியிலே இருப்பவரே அங்கே குருவாக வந்து விளங்கும் அவரின் வாசகத்தை கேட்பார்!  அதுவே மணிவாசகம்! இவர்களே முதலில் அன்புருவம் பெறுவர் பின் அருளுருவம் பெற்று அதன் பின்னரே இன்புருவம் பெற்றுய்வர்! வாதவூர் நாயகனே, நீ அருளிய திரு அண்ட பகுதி திருஅகவலில் நீ இரு என எனக்கியம்பியதாக எண்ணம் கொண்டு இன்புறுகிறேன் குருபிரானே! "வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை நான் பாடுங்கால் என் ஊன்கலந்து உயிர் கலந்து
உவட்டாமல் இனிபதுவே" "மாணிக்கவாசக உன் வாசகத்தில் ஒரு மொழியே குரு மொழி எனக்கொண்டேன்"  வேறொன்றும் எனக்கு வேண்டாம் என்கிறார் வாதவூரரை குருவாக கருதிய வடலூரார்!


இறைவனே குதிரை சேவகனாக வந்தும், பிட்டுக்கு மண் சுமந்து வந்தி எனும் மூதாட்டிக்கு அருள்பாலித்ததும் ,மாறன் பிரம்படி பட்டதும் மணிவாசகப் பெருந்தகையே உன் பொருட்டன்றோ! சுந்தருக்காக தூதுபோன
சிவன் மணிவாசகருக்கு மண் சுமந்தார்! மணிவாசகர் மகிமை மாநிலம் அறிய திருவிளையாடல் புரிந்தார்! இறைவன் அடியாருக்காக அடிபட்டரே! என்ன சொல்லிப் பாடுவது அடியாரை! அடியார்க்கு அடியாரை!

மாணிக்க வாசகா  உன் திருவாசகம் கேட்டாலே பறவைகள் மிருகங்களுமே ஞானம் பெறுமென்றால் எனக்கு கிடைக்காதா என்ன?! மெய்ஞான நாட்டமுற  மணிவாசகமாம் திருவாசகம் படி! கேள்! திருவாசகத்தை கேட்க என் செவிகள் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்! திருவாசகத்தை படிக்க
என் வாய் பல கோடி புண்ணியம் செய்து இருக்கவேண்டுமே !

"திருவாசகத்திற்கு உருகார்  ஒரு வாசகத்திற்கும் உருகார்!

ஒவ்வொரு வீட்டில் இருக்க வேண்டிய ஞான பொக்கிஷம் திருவாசகம்!

இறைவனே தன் கையால் ஓலை சுவடியில் மணிவாசகர் சொல்லச் சொல்ல எழுதிய ஒப்புயர்வற்ற ஞான நூல்! இதன் பெருமைக்கு அளவே இல்லை!

திருவாசகத்தில் தோய்ந்து தோய்ந்து திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பாடிய  பாமாலைகளே திருவருட்பா ! திருவாசகத்தின் மகிமையை திருவருட் பிரகாச வள்ளலிடம் தான் கேட்க வேண்டும்!
"தோத்திரத்தில்  சிறந்தது திருவாசகம்"



ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட் பாமாலை




Tuesday, 13 November 2012

ஆளுடைய அடிகள் அருண்மாலை


தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
வாசகனே
ஆனந்த வடிவான மாதவனே
மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே


நமது தேகத்தில் இனிக்கின்ற தெள்ளிய அமுது அமுது போன்றவனே !
மாணிக்கவாசக பெருந்தகையே! சதா ஆனந்த வடிவமான மாதவம் செய்தவனே,மாதவனே!குற்றம் ஒன்றுமிலா நீ திருவாய் மலர்ந்து அருளிய திருவாசகம் எனும் தமிழ்மா மறையின் முழுமையான வேறு ஒன்றுமின்றி விளங்கும் சிவ அனுபவத்தை நான் பெற உன் பரிபூரண நல்லருள் தருவாயே!

ஆளுடைய நம்பிகள் அருண்மாலை


மதியணிசெஞ் சடைக்கனியை மன்றுள்நடம் புரிமருந்தைத்
துதியணிசெஞ் சுவைப்பொருளில் சொன்மாலை தொடுத்தருளி
விதியணிமா மறைநெறியும் மெய்ந்நிலைஆ கமநெறியும்
வதியணிந்து விளங்கவைத்த வன்தொண்டப் பெருந்தகையே

வான் தொண்டர் என்ற திருப்பெயரை உடைய 
சுந்தர மூர்த்தி பெருந்தகையே!
பிறைச்சந்திரனை சடையில் அணிந்த கனி போன்றவனும் தில்லையம்பலத்துள் நடம் செய்யும் மருந்தை போன்றவனுமான சிவபெருமானை துதிப்பதை பாமாலை சுட்டுவதையே பொருளாக கொண்டு செஞ்சொற்பாமாலை பல பாடி விதிகள் பொருந்திய வைதீக நெறி கூறும் மறைகள் மெய்நிலை கூறும் ஆகம நெறியும் நிலைமாறு செய்து
உலகம் உய்ய அருள் செய்தவரே உன்னை வணங்குகிறேன் அருள்க!


ஆளுடைய அரசுகள் அருள்மாலை

திருத்தகுசீர் அதிகைஅருள் தலத்தின் ஓங்கும்
சிவக்கொழுந்தின் அருட்பெருமைத் திறத்தால் வாய்மை
உருத்தகுமெய் உணர்ச்சிவடி வாகிச் சைவ
ஒளிவிளங்க நாவரசென் றொருபேர் பெற்றுப்
பொருத்தமுற உழவாரப் படைகைக் கொண்ட
புண்ணியனே
நண்ணியசீர்ப் புனித னேஎன்
கருத்தமர்ந்த கலைமதியே கருணை ஞானக்
கடலேநின் கழல்கருதக் கருது வாயே



மேன்மையுடைய சிறந்த திருவதிகை என்ற அருள் நிறைந்த திருப்பதியில்
விளங்கும் சிவபரம்பொருளின் திருவருட் பெருமையால் சத்தியத்தின் மெய்
உணர்வின் வடிமான சைவ நெறியில் ஒளி விளங்க திருநாவுக்கரசர் எனும் பெயர் தாங்கி மேற்கொண்ட நெறிக்கு தக்கப்படி உழவார படைகையில் ஏந்திய
புண்ணியனே! சிறந்த புண்ணியனே புனிதமானவனே தூயவனே என் கருத்தமர்ந்த கலை, ஒளிக் கலை யுடைய சந்திரனே,கருணை மிகுந்த ஞானகடலே உன் திருவடியை
எந்நாளும் நினைந்து துதித்திட உன்னருள் தருவாயே!
 


ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை

உலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும்
உற்றிலாச் சிறிய ஓர் பருவத்
திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில்
ஏற்றவுந் தரமிலா மையினான்
விலகுறுங் காலத் தடிக்கடி ஏற
விடுத்துப்பின் விலகுற தளித்தாய்
திலகநற் காழி ஞான சம்பந்தத்
தெள்ளமு தாஞ்சிவ குருவே


சீர்காழி பத்தியில் அவதரித்த திருஞானசம்பந்தர் என்னும் தெளிந்த
ஞான பிரானே சிவ குருபரனே! உலகியல் அறிவு சிறிதும் பெறாத சிறு
பருவத்தில் இருந்த எனக்கு அகநிலை நின்று திருவருள் நெறிப்படவும்!
போதுமான தகுதி இன்மையால் அதினின்று தடுமாறி விழும்போது தடுத்து
காத்து செந்நெறி நிறுத்தி பின் அதினின்று மெய்நிலை மேல்நிலை பெற
அருளியும் செய்தாயே! உன் பேரருள்  பெருங்கருணையே!


உயிர்அனு பவம்  உற்றிடில் அதவிடத்தே ஓங்கருள் அனுபவம் உறும்அச்
செயிரில்நல் அனுபவத்திலே சுத்த சிவ அனுபவம் உறும் என்றாய்

உயிர் அனுபவம் - நம் கண்மணி ஒளியில் சும்மா இருந்து தவம் செய்தால் உயிர் அனுபவம் கிட்டும்! தொடர்ந்து தவம் செய்தால் அருள்பெறலாம்! இன்னும் தவம் தொடர்ந்தால் உயிருக்கு உயிரான சிவ அனுபவ ஒளி  கிட்டும் !!



 

Monday, 12 November 2012

ஞான ரகசியம்

நாதக்கதி  கடந்த பெருங்கருணை கடைக்கண் மலர்ந்தருளி

இது முக்கியமான ஒரு ஞான ரகசியம்! இறைவன் அருள்
எப்போது கிடைக்கும்? ஆத்ம தரிசனம் எப்பொழுது கிடைக்கும்? என்ற கேள்விக்கு இதுவே விடை! நாம் ஞான சற்குரு விடம் இருந்து திருவடி தீட்சை பெற்று சும்மா இருந்து தவம் செய்து வருகையில் பலபல அனுபவங்களுக்கு பிறகு நாதத்தொனி  கேட்கும். தசவித நாதம் கேட்கும்.அந்த நாதம்  உள்ளே எங்கோ போய் முடிகிறதோ?! அதுவே அதன் ஆரம்ப இடம்! அந்த இடமே முச்சுடரான லாலடஸ்தானம்!ஆத்ம ஸ்தானம் ! வெளியே இருகண்கள் உள்ளே சேரும் கடைசி - கடைக்கண்! அதுவே! வலது கண்ணும் இடதுகண்ணும் உள்ளே போய் ஒன்று சேரும் இடமே கடைக்கண்! அம்மா தாயே உன் கடை கண்ணால் பார்க்க மாட்டயா? என எல்லா ஞானிகளும் பாடியது! இந்நிலையில் தான் ! இதில் இன்னொரு ரகசியமும் உள்ளது! அம்மா என்று அழைக்கிறார்கள்  ஞானிகள்  !காரணம்? "நாத முடிவில் நல்லாள் இருப்பிடம்" நாதம் முடியுமிடம் கடைக்கண்! மூன்றாவது கண் உள்சுடர்! இந்த இடம் தான் வாழை தாய் இருக்குமிடம்!  வாலையை பணிந்து அருள் பெற்று அமுது உண்ட பின்னரே அப்பனை காண போக வேண்டும்! அம்மை தான் வாலை தான் வழிகாட்ட வேண்டும் ! அந்த வாலை கோயில் கொண்ட இடம்தான் கன்னியாகுமாரி! வாருங்கள் கன்னியாகுமரிக்கு வாலை அருள் பெறவே! பக்தி வேண்டும் பண்பு வேண்டும். பணிவு இருக்கணும் அன்பு இருக்கனும் அப்போது தான் வாலை தாய் மகிழ்ந்து அமுதம் தருவாள்! வறட்டு வேதாந்தம் பேசாதீர்! புறத்தே பக்தி, அகத்தே மானச பூசை! இருந்தாலே ஞானம் கிட்டும்! அருள் பெறலாம்!

Saturday, 10 November 2012

மனிதர்கள் ஜீவர்கள் தாமே தம்மை அறிந்து கொள்ளும் அறிவில்லை !!

மனிதர்கள் ஜீவர்கள் தாமே தம்மை அறிந்து கொள்ளும் அறிவில்லாதவர்கள்! ஆனால் அறியக்கூடிய  தன்மை உண்டு! அறிவித்தால் அறிவான்! அறிவிக்க கூடிய ஆசானே ஆருயிரை உபதேசம் தீட்சையின் மூலம் சிவத்துடன் கலக்க செய்பவன்! இதை எல்லோருக்கும் உணர்த்த தான் எல்லா கோயில்களிலும் மூலஸ்தானத்தை சுற்றி வரும் போது தெற்கே ஆதிகுருவாம் தட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ளார்! குருவின் முக்கியத்துவத்தை பாமரனுக்கு உணர்த்தவே! கடவுளை அடைய அவசியம் வேண்டும் ஒரு குரு! அந்த இறைவன் திருவடியை சுட்டிகாட்டு பவரே குரு! அந்த திருவடி பெருமையை வள்ளல் பெருமான் பாடி மகிழ்கிறார்!

ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
தெய்வங்கள் எல்லாம் தரிசிக்கும் பாதம்


திருவடி எங்கு உள்ளது? அதை .....

சமணர் புத்தரை பற்றி ஞான சம்பந்தர்!!

மத்தம் மலி சித்தத்திறை மதியிள்ளதவர் சமணர்
புத்தரவர் சொன்னம் மொழி பொருளா நினையே  மின் 




மந்த புத்தியுடைய அறிவில்லாதவர்கள், சிந்தையிலே இறைவனை எண்ணாத முட்டாள்கள் தான் சமணர் புத்த மதத்தினர்! அவர்கள் சொன்ன மொழிகளை ஒரு பொருட்டாக நினைக்காதீர்!?அரை வேக்காட்டு ஆசாமிகள் அவர்கள் என கடுமையாக சாடுகிறார்  சம்பந்த பெருமான்! நேரடியாக புத்த சமண மதத்தவர்களை பார்த்தார் அல்லவா? அவர்களைப்  பற்றி முழுமையாக
அறிந்ததால் தான்  சம்பந்தர்  பெருமான் இவ்வளவு  கடுமையாக சாடினார்! மாபெரும் ஞானி, ஆண்டவனை 3 வயதிலேயே கண்டு ஞான பால் அருந்தியவர். இறந்தவர்களை எழுப்பிய ஒப்பற்ற சித்தர். சகலமானவர்களோடு கூண்டோடு கைலாசம் போனவர்! தான் மட்டும் ஒளியாகாமல் தன் திருமணத்திற்கு வந்த அனைவரையும் ஒளி உடல் பெற செய்து அந்த பேரொளியான இறைவனோடு இரண்டற கலந்தவர்! மாபெரும் ஞானி! அவர் கூற்று பொய் ஆகுமா? உலகில் மனிதன் மனிதனாக வாழ்ந்து இறைவனோடு கலக்க சனாதன தர்மமே ஒரே நெறி! வாழும் நெறி! தூய நெறி ! நாம் செய்த
தவ பயன், திரு ஞான சம்பந்தர் பிறந்து வாழ்ந்து ஞான நெறி பரப்பிய, இன்றும் தெய்வமாகி அருள் புரிந்து கொண்டுஇருக்கிற தமிழ் நாட்டில் பிறந்தது தான்!! வேஷம் போட்டு உலவும் போலிகள் பேச்சை கேட்காதீர்கள், வேத புராண திருமந்திர திருவாசக திருவருட்பா உரைக்கும் ஞானம் கேட்பீர்!!


மாணிக்கவாசகர், வள்ளலாரும் இதே கருத்தை சொல்லி உள்ளனர்!

மூவர் உணர்ந்த முகக்கண்

Friday, 9 November 2012

காமத்தை என்ன செய்வது ? வாலை அருள் பெறுவது?

சித்திபெற விந்து நிலை மூலந்தனை
சிதறாமல் கட்டினவன் சித்தன் சித்தன்
சத்தியமே தவறாம லிருக்க வேணும்
தன்னுயிர் போல்  மன்னுயிரை காக்க  வேணும்.

தவ  சீலர்கள் விந்துவை பாழிலே  விடக்கூடாது ! பாழாய்  போவர்!
பிரமச்சர்யம் மிக மிக அவசியம்! கல்யாணம் பண்ணாமல் இருக்க
சொல்லவில்லை! கல்யாணம் பண்ணுவது வரை உத்தம பிரமச்சாரியாக  இருக்க வேண்டும்! கல்யாணத்திற்கு பின் தன் மனைவியோடு மட்டும் கூடலாம். சந்தான விருத்திக்கு மட்டுமே விந்து விடலாம்! இல்லற வாசிகள் ஆபாச பட்ட சுக்கிலத்தை 15 நாள் ஒரு முறை மட்டுமே நீக்கலாம்!   


தன்  மனைவியைத்  தவிர ஏனைய பெண் கள்  அனைவரையும் தாயாகவே பாவிக்க வேண்டும். அப்படி பட்டவனே உத்தமன்! கல்யாணம் பண்ணியும் இது மாதிரி பிரமச்சாரியாக வாழலாம்! மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்" என வள்ளலார் கூறுவதை கவனிக்க!

"காமமகற்றிய தூயன் சிவகாமி நேயன்" இறைவன் திருவடியை பற்றியவர்கள் இரட்சிக்க படுவார்கள்! நாம் காமம் கொள்ள வேண்டியது சிவத்தின் மீதே! சிவமாகிய ஒளியின் மீதே தீரக்காமம் வேண்டும்! அப்படி இருந்தால் நாம் தான் சிவகாமியாவோம்! வாலையான சிவகாமி நம்முள் துலங்குவாள்!
காமத்தை ஆட்சி செய்யும் அவளே காமாட்சி!  தாயாக - குழந்தையாக பார்த்தால் காமம் வருமோ? அபிராமி பட்டார் பார்த்தல் எல்லா பெண்களையும் தாயாக!

அப்படி விந்து கட்ட கட்ட மணியாகி ஒளியாக அற்புத ஆற்றலை பெறுவான்! அவனே சித்தன்! அது மட்டும்  போதாது சத்தியநெறி தவறாமல் வாழ வேண்டும். எவ்வுயிரும் தன்னுயிர் போல கருத வேண்டும்.
அப்படிப்பட்ட பரோபகாரியே வாலை  அருள் பெறுவான்! சிந்தை தடுமாற சித்தன்  ஆவான்

ஞான சற்குரு சிவசெல்வராஜ் 
தங்க ஜோதி ஞான சபை
கன்னியாகுமரி