அகத்தியர் சித்தரின் மெய்பொருள் - விளக்கம்:
"தோணிபோல் காணுமடா அந்த வீடு சொல்லாதே ஒருவருக்கும்"
அதாவது இறைவன் நம் உடலில் இருக்கும் இடம் தோணிபோல் காணும் என்கிறார். நம் உடலில் கண் தோணிபோல் தானே இருக்கிறது? இந்த தோணியே தான் இறைவன்-ஜீவன் குடியிருக்கும் வீடு.
சீர்காழி ஊரில் குடிகொண்டிருக்கும் சிவனுக்கு தோணியப்பர் என்ற பெயர் இதனால்தான் வழங்கப்படுகிறது.
"காணுகின்ற ஓங்கார வட்டம் சற்றுக்
கனலெழும்பிக் கண்ணினிலே கடுப்புத் தோன்றும்"
நமது கண்ணைத்தான் ஓங்கார வட்டம் என்கிறார். அங்கே ஜீவ ஒளி உள்ளது. நமது நினைவை கண்மணியில் நிறுத்தி, சாதனை புரிந்தால் கனல் எழும்பும். அப்போது கண்ணில் கடுப்பு தோன்றும் என்று தனது அனுபவ நிலை பற்றி எந்த மறைப்புமின்றி வெளிப்படுத்தியிருக்கிறார். பற்றுங்கள், பற்றிக்கொள்ளும்! பெரும் நெருப்பாகும்!அந்த சுத்த உஷ்ணம் உடல் முழுவதும் வியாபித்து ஒளி உடலாகும்.
மேலும்
"தேகமதில் ஓரெழுத்தை காண்போன் ஞானி " என்கிறார்
அதாவது நமது தேகமதில் நாம் காண வேண்டியது உள்ளே உறைந்திருக்கும் இறைவனை. அவர் ஒளியாக உள்ளார். ந - ம - சி - வ - ய என்ற பஞ்ச பூதத்தில் ஒரு எழுத்தாகிய 'சி' என்ற அக்னி கலையை யார் காண்கிறார்களோ அவர்களே ஞானி எனக் கூறுகிறார்.
Thursday, 4 July 2013
மெய்பொருள் பற்றி திருமந்திரப் பாடல்கள்:
நமக்காக நமது முன்னோர்கள் எத்தனையோ ஞான பொக்கிஷங்களை தந்தருளியிருக்கிறார்கள். தமிழ் அறிந்தவர்கள் உண்மையில் மிகவும் பாக்கியசாலிகள். இங்கே இருக்கின்ற அளவு ஞான நூல்கள் வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை. இங்கே இருக்கின்ற அளவு ஞான பெருமக்கள் வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தாள் ஒரு சமாதியின் மேல்தான் விழ வேண்டி இருக்கிறது. சமாதி என்றால் சம-ஆதி. அதாவது ஆதியான இறைவன் நிலையை அடைந்தவர்கள். செத்தைவனை புதைத்தல் அது சமாதி அல்ல.
இனி சாத்திரத்தில் சிறந்த "திருமந்திரம்" கூறும் சில மெய்ஞான பாடல்களை கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எல்லா ஞானிகளும் இறைவன் உடலில் கண்ணில் காரியப்படுவதை தெளிவுபடுத்தி அடைய வேண்டிய நிலையும் வழிகளையும் கூறிச்சென்றதையும் திருமூலர் தெளிவுபட விளக்குகிறார்.
"விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உணனின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிப்பருத் தானே" - திருமந்திரம் 113
இந்த பாடலில் இறைவன் நம் உடலில் இருக்கும் பான்மையினை தெளிவுபடுத்தியுள்ளார்கள் . இறைவன் ஆகாயத்திலிருந்து இறங்கி நாம் செய்துள்ள பாவ புண்ணிய வினைகளுக்கு தகுந்தவாறு உடல் எடுத்து குளிர்ச்சி பொருந்திய திருவடியை நம் தலைக்கு முன்பக்கத்தில் காட்டி - உள் நின்று உருக்கி ஒப்பில்லாத ஆனந்தத்தை கண்ணிலே காட்டி களிம்பாகிய மும் மலத்தை அறுத்தான். இல்லாமல் செய்கிறான் என்கிறார். இந்த ஒரு பாடல் போதுமே ஒருவன் ஞானம் பெறுவதற்கு!
"பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற்
பார்ப்பான் பசு ஐந்தும் பாலாச் சொரியுமே " - திருமந்திரம் 2883
பார்ப்பான் - பார்ப்பது கண்தானே . எனவே கண்தான் பார்ப்பான். அதில் உள்ள ஒலிதானே நம்மை நடத்திச் செல்கிறது! கண்-பார்ப்பான்-பார்த்தன், ஒளி-நடத்துபவன்-சாரதி. கண் ஒளியைத்தான் - கண்ணனைத்தான்(கண்) - நாம் பார்த்த சாரதி என்கிறோம். இந்த பார்ப்பன் அகத்திலே பார்ப்பசு ஐந்துண்டு அதாவது புலன்கள் ஐந்துண்டு என்கிறார். இதை நாம் மேய்க்காவிட்டால் - கட்டுப்படுத்தாவிட்டால் கண்ட கண்ட இடத்தில் மேய்ந்து விடும். மனதை கட்டுப்படுத்தும் மார்க்கத்தை அறிந்து நாம் நம் புலன்களை நம் வசப்படுத்தினால் கர்மேந்திரியங்கலான நம் புலன்கள் ஞானந்திரியமாக மாறி அதனால் நமக்கு அமுதம் கிடைக்கும் என்று கூறுகிறார்.
மனிதனாக பிறந்த நாம் அரிய வேண்டிய இரகசியம்!
எல்லாம் வல்ல இறைவன் பெருஞ்ஜோதிமயமானவன் என்றும் அவனே சிறுஜோதியாக நம் உடலில் உயிராக இருக்கின்றான் என்பதும் தான் மனிதனாக பிறந்த நாம் அரிய வேண்டிய மாபெரும் இரகசியம்!
இதை அறிந்தவன், தகுந்த குருமூலம் உணர்ந்தவன் தான் ஞானம் பெறுவான்! அறிந்தால் மட்டும் போதாது! குருமூலம் தீட்சை மூலம் உணரவும் வேண்டும்! தவம் செய்யவும் வேண்டும்! அப்போதுதான் ஞானம் கிட்டும்! இறையருள் பெறலாம்!
இந்த ஞான இரகசியத்தை அறியாமல் இந்த உலகில் நீங்கள் வேறு எதை செய்தாலும் ஞானம் கிட்டாது!?
தன் உயிரை அறிவதே, உணர்வதே இறைவனை அறிவதும் உணர்வதுமாகும்! தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும்! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!
உயிர் நம் உடலில் எங்கிருக்கிறது? என தெரிந்தால் தானே! எப்படி இருக்கிறது என்று தெரிந்தால் தானே தவம் செய்ய முடியும்?!
கடோபநிசத்தில் எமதர்மனிடம் நசிகேசன் உயிர் பற்றி, கடவுள் பற்றி கேட்க அவர் கூறுகிறார், “இறைவன் மனிததேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் புகையில்லாத ஜோதியாக விளங்குகிறான்”. என்று!? இதில் உடனே நாம் இரு விசயங்களை தெரிந்துகொள்ளலாம். ஒன்று இறைவன் மனித தேகத்திலும் உள்ளார் என்பது!
மனித தேகத்தில் உள்ளார் சரி!? நாம் வெளியே பார்க்கும் ஜோதி – தீ புகையுள்ளது இறைவன் பெருஞ்ஜோதியானவன் – தீ வண்ணன் புகையில்லாத ஜோதிஸ்வருபம் இதுவும் சரி!? நம் உடலில் எங்கிருக்கிறது? அந்த ஜோதி – உயிர் – இறைவன்? சின்முத்திரை அளவான இடம்! இதுதான் மாபெரும் இரகசியம்! குருஊபதேசம் மூலம் அரிய வேண்டியது! அடியேன் இங்கே குரு எங்களுக்கு உபதேசித்ததை எழுதுகிறேன்!
நன்றாக கவனமாக பாருங்கள்! மனித தேகத்தில் சின்முத்திரை அளவான இடத்தில் உள்ளார்! சின்முத்திரை பிடித்துக் கொண்டு உட்கார சொல்லவில்லை! சின்முத்திரை பிடித்தால் அதாவது நமது கை பெருவிரலும் ஆள்காட்டி விரலும் தொட்டுக் கொண்டநிலை அல்ல! ஆள்காட்டி விரல் மடக்கி பெருவிரலின் மத்தியிலுள்ள கோடை தொட்ட நிலையில் மற்ற மூன்று விரலும் நீட்டியபடி இருப்பதே “சின்முத்திரை”!
இப்படி சின்முத்திரை பிடித்தநிலையில் கை பெருவிரல் மத்தியிலுள்ள கோடு வரை உள்ள இடமே நம் கண் அளவு! வைத்துப் பாருங்கள்! சின்முத்திரை – கண்போல தோன்றும்! அதாவது இறைவன் மனித தேகத்தில் கண்ணில் ஜோதியாக துலங்குகிறான் என்பதே மாபெரும் ஞான இரகசியாமாம்!
“தேவன் ஒளியாக இருக்கிறார்! நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கலாம்! கண்ணே சரீரத்தின் விளக்காயிருக்கின்றது! உன் கண் ஒளி உள்ளதாக இருந்தால்! உன் சரீரம் முழுவதும் ஒளியுள்ளதாக விளங்கும்!” பைபிள் கூறும் ஞானம்! “ஒளியான தேவனை அடைய கண் ஒளியை பெருக்கு என்பதே”!
இயேசு கிறிஸ்து மட்டுமல்ல முகமது நபியும் புத்தரும் குருநானக்கும் மற்றும் உலகிலுள்ள எல்லா ஞானிகளும் உபதேசித்த உண்மை இதுவே!

Subscribe to:
Posts (Atom)