Tuesday, 30 October 2012

சுத்த உஷ்ணம் பெருக்குவது எப்படி ?

நமது மண்டையில் தினமும் நாம் சாப்பிடும் ஆகார சத்து சேர்ந்து சேர்ந்து சக்தி தருகிறது. அதோடு அங்கிருக்கும் அழுக்கு கோழை வெளியேறாது தங்கி விடுகிறது. பிறக்கும் போது தலை உச்சி மெல்லிய தோல் மூடி இருபது, வளர வளர கெட்டிப்பட்டு கடினமாகிறது!? இதுவே குண்டிகை மாசு.! சராசரி  மனிதன்
நிலை இதுவே! கோழை அதிகமாகி தொண்டையில் இறங்கி மூச்சு விட முடியாமல் மூச்சடைத்து இறக்கிறான் மனிதன்! நம் உடம்பில் உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அழுக்கே நிரம்பியிருக்கிறது! மல ஜலம் மட்டுமல்ல தலை உச்சியில் கோழை கண்ணில் பீழை மூக்கில் சளி காதில் அழுக்கு வாயில் எச்சில் தொண்டையில் நெஞ்சில் கபம் உடலெல்லாம் வியர்வை கைகால் நகங்களில் அழுக்கு இப்படி அழுக்கு மூட்டையே நம் உடம்பு! தினமும் குளித்து நமது புற உடலை தூய்மையாக்கினால் மட்டும்
போதாது! நல்ல ஆகாரத்தில் கூடுமான வரை எந்த அழுக்கும் வராமல் ஓரளவு காக்கலாம்!

உடலில் எந்த அழுக்கும் வராமல் சேராமல் காக்க ஒரே வழி ஞான தவம்! கண்ணை விழித்திருந்து தவம் செய்தால் ஏற்படும் சுத்த உஷ்ணம் உடல் முழுவதும் பரவி எல்லா அழுக்கையும் வெளியேற்றுகிறது!?
ஜன்ம ஜன்மந்திரமாய் உள்ள மும்மல அழுக்கையும் வெளியேற்றி நம் உடலை தூய்மையாக்கும்! மலம்  இல்லாத விமலன் இறைவன் நகர் நம் சிற நாடு உள்போ! தூய்மையாகு!


No comments:

Post a Comment