Tuesday, 23 October 2012

ஆசை வேண்டாம்

நக்கீரர் நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்னாரே, சிவ பெருமான் ஆச்சே அவரை நாம் சொல்லலாமா என்று நினைச்சார நக்கீரர்?  நீ சிவனா இருந்த என்ன எவனா இருந்த என்ன? "நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே".  அது தான் ஞானம். தப்புன்னா தப்பு தான்!  அதுலே உனக்கு
மட்டும் எதுக்கு எக்ஸ்கூஸ், படைத்தவன் நீயே இப்படி தப்பு பண்ணிட்டு இருந்த பின்னே  மற்றவர்கள் எப்படி இருப்பாங்க.உண்மையை சொல்லணும் சத்தியத்த சொல்லணும். யாருக்கும் பய பட வேண்டியது  இல்லை
தைரியமா சொல்லலாம். இறைவன் நம்ம பக்கம் தான் உள்ளான். உண்மையை தான் சொல்லுறோம், நல்லது தானே சொல்லுறோம். அப்புறம் என்ன.
நாம் சொல்வது நாட்டில் போலிகள் உள்ளான், ஏமாத்துறான், இப்படி எல்லாம் சொல்லி எச்சரிக்கை கொடுக்கிறோம்.

எல்லாவற்றுக்கும் ஆசை படு என்று ஒருத்தர் சொல்லுறார். எந்த வகையில் நியாயம்.நம் நாட்டின் சனாதன தர்மம் சொல்வது 'ஈசனோடு ஆயினும் ஆசையை அறுமின்'  ஆசையே படாதே பற்று அற்று வாழ். இது ஞானத்தின் போதனை. நீங்க எல்லாவற்றுக்கும் ஆசை படு என்றால், எவ்வளவு
பெரிய தப்பு. முட்டாள் தனம். இதை கேட்க கூடாதா? கீழ் தரமானவர் என்று இதில் இருந்து தெரிகிறது. சிந்தனையே இல்லமால் செம்மறி ஆட்டு கூட்டம் போலே ஒவ்வொரு சாமிக்கும் பின்னாலே போய் கொண்டு  இருக்கிறான்.
உண்மை சத்தியம் நேர்மை ஒழுக்கம் பண்பாடு கலாச்சாரம் இது தான் நமக்கு வேண்டும். அது தான் நமது சனாதன தர்மம். நீதி நேர்மை ஒழுக்கம் வேண்டும். இல்லை என்றால் அவர் என்ன பேசினாலும் பிரயோஜனம் இல்லை.

யாரை எல்லாம் இந்த உலகத்தில் போற்றுகிறார் என்று பாருங்கள். ராமகிருஷ்ணர், அப்பழுக்கு இல்லாத ஒரு பக்தர், குழந்தை  மாதிரி, விவேகனந்தர் அவரை சோதிப்பதற்கு ஒரு ரூபா நாணயத்தை தலையணை அடியில் வைத்தார். இவர் வந்து படுத்தார். துள்ளி எழுந்தார். அவ்வளவு தூரம் பணம் பொருள் மேல் பற்று இல்லை. தலையணை அடியில் இருக்குன் எப்படி உணர்ந்தார்? அவ்வளவு அதிர்வு. அதை உணரும் அளவுக்கு ஆன்மா சுத்தமாக இருக்கும். அவர்தான் ஞானி. எல்லா வற்றுக்கும் ஆசை படு என்று சொல்பவன் ஒரு  பாவி.


உலகில் அதிக படியான மக்கள் எல்லாவற்றுக்கும் ஆசை படும் மக்கள். அவர்களை இழுக்க வேண்டும் என்று சொன்னால் அப்படி சொன்னால் தான் இழுக்க முடியும்..சும்மாவே ஒரு டன் ஆசை இருக்கும். இப்படி சொல்லி விட்டால் அவ்வளவு  தான் சாதாரண மக்கள் எப்படி புரிந்து கொள்வான்?

No comments:

Post a Comment